காவேரிப்பாக்கத்தில் பைக் திருடிச் சென்றவன் கைது

காவேரிப்பாக்கத்தில் பைக் திருடிச் சென்றவன் கைது
X
காவேரிப்பாக்கத்தில் பைக்கைத் திருடிச் சென்றவனை போலீஸார் கைது செய்தனர்.

காவேரிப்பாக்கம் அடுத்த பூண்டி கிராமம் பிராமண தெருவைச் சார்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வெங்கடேசன் வயது 31 என்பவர் கடந்த 25. 6. 21 அன்று காஞ்சிபுரம் வேலைக்குச் சென்று தனது இரண்டு சக்கர வாகனம் அப்பாச்சியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு சுமார் 10.30 மணிக்கு காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வாகனம் பழுதாகி நின்று விட்டது அந்த இடத்திலேயே வாகனத்தை லாக் செய்துவிட்டு சென்று மெக்கானிக்கை அழைத்து வந்து பார்த்த போது இரண்டு சக்கர வாகனத்தை காணவில்லை.

இதுசம்பந்தமாக வெங்கடேசன் காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று வாணி சத்திரம் அருகே காவல் உதவி ஆய்வாளர் வசந்த் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, ஆற்காடு அண்ணம்பாளையத்தை சேர்ந்த பாலாஜி வயது 21 என்பவர் அப்பாச்சி இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அவரை நிறுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டபோது முன்னுக்குப் பின்னான பதில் சொன்னதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது கடந்த 25ஆம் தேதி திருடுபோன வெங்கடேசன் என்பவரின் வாகனம் என்பது தெரியவந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு