யூ-டியூபைப் பார்த்து மனைவிக்கு பிரசவம்: சேய் உயிரிழந்தது, தாய் கவலைக்கிடம்

யூ-டியூபைப் பார்த்து மனைவிக்கு பிரசவம்: சேய் உயிரிழந்தது, தாய் கவலைக்கிடம்
X

யூடியூப்பை  பார்த்து பிரசவம் பார்த்த கணவன் லோகநாதன்

நெமிலி அருகே யூ-டியூபைப் பார்த்து கணவன், மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தது. மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியடுத்த நெடும்புலியைச்சேர்ந்த லோகநாதன் (32), இவர் அதேப்பகுதியில் மரச.செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார் அவர்மனைவி கோமதி (26) நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு மருத்துவமனையில் கடந்த 13ந்தேதிகுழந்தை பிரசவமாகும் என்று மருத்துவர்கள் கூறியபடி ஆகவில்லை. இதனால் வீட்டிலிருந்த அவருக்கு கடந்த 18ந்தேதி மதியம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

அப்போது லோகநாதன், தனது சகோதரி கீதாவுடன் யூ-டியூபைப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது . அதில் கோமதிக்கு ஆண் குழந்தைப் பிறந்து இறந்தது .. மேலும் கோமதியின் நிலைமை மிகவும் மோசமானத்தை கண்டு பயந்து உறவினர்கள் உடனே அருகிலுள்ள புன்னை ஆரம்பசுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்

அங்கிருந்து கோமதியை வேலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோமதிக்கு பிரசவம் பார்த்தது தொடர்பாகவும் அவரது குழந்தை இறந்தது குறித்தும் புன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மோகன் போலீசில் அளித்தார். புகாரின் பேரில் நெமிலி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!