ஓச்சேரியில் பொதுமக்களிடம் போதையில் ரகளை செய்த வாலிபர்கள் 3 பேர்கைது

ஓச்சேரியில் பொதுமக்களிடம் போதையில் ரகளை செய்த வாலிபர்கள் 3 பேர்கைது
X

ஓச்சேரியில் போதையில் ரகளை செய்து கைதானவர்கள்

ஓச்சேரி பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களிடம் பீர்பாட்டிலை உடைத்து போதையில் ரகளை செய்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செயதனர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்களிடம் அடையாளம் தெரியாத 3 ,வாலிபர்கள், போதையில் பீர்பாட்டிலை உடைத்து மிரட்டி ரகளையில் ஈடுபட்டு வருவதாக அவளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

உடனே, போலீஸார் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டிருந்தவர்களைப்பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், சென்னை மூர்மார்க்கெட்டைச் சேர்ந்த ஆதிபகவான்(27) விருத்தாசலத்தைச் சேர்ந்த கந்தவேல்(21),மற்றும் வண்டலூரைச்சேர்ந்த பிரகாஷ்(19)ஆகிய 3பேரும் நண்பர்கள். அவர்கள் 3பேரும் சென்னையிலிருந்து வேலூருக்கு வேலை விஷயமாக சென்று விட்டு பஸ்ஸில் சென்னைக்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது, ஓச்சேரியில் இறங்கி அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி குடித்துள்ளனர். மூவரும் போதை ஏறியவுடன் ஓச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் வாகனங்களை அடித்து நொறுக்கும் விதமாக அவர்களிடமிருந்த பீர் மற்றும், மதுபாட்டில்களை உடைத்து ரகளை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனர்..

இதுகுறித்து, அவளூர் போலீஸார்வழக்குப் பதிந்து ரகளையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட ஆதிபகவான்,கந்தவேல்,மற்றும் பிரகாஷ் ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்