புதுப்பட்டு திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கோலாகலம்

புதுப்பட்டு திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கோலாகலம்
X

புதுப்பட்டு திரவுபதி அம்மன் கோயிலில் நடந்த அக்னி வசந்த விழா.

காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு திரவுபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவை யொட்டி தீமிதி விழா விமரிசையாக நடந்தது.

இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டில் திரவுபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா நடந்தது.

விழா தொடக்கமாக கடந்த மாதம் 8ந் தேதி கொடியேற்றம் நடந்தது. இதனைத்தொடர்ந்து 29ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி தொடங்கியது. அதில், தினசரி பகலில் சொற்பொழிவும் இரவில் தெருக்கூத்தும் நடந்து வந்தது.

சொற்பொழிவின் போது, திரவுபதி திருமணம், மாடுவிரட்டு, அர்சுனன் தபசு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பின்பு சொற்பொழிவு நிறைவாக முக்கிய நிகழ்ச்சிகளான கர்ண மோட்சம், துரியோதனன் படுகளம் ஆகிய நிகழ்ச்சிகள் கடந்த 18நாட்களாக நடந்து விழா இறுதியில் அம்மன் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதில், 700க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் புதுப்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராம்மக்கள் ஆயிரகணக்கோனோர் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு