சோளிங்கர் நரசிம்மர் கோயில் ஆடிப்பூரம் நிறைவு விழா

சோளிங்கர் நரசிம்மர் கோயில் ஆடிப்பூரம் நிறைவு விழா
X

சோளிங்கர் பக்தோசித பெருமாள்

சோளிங்கர் லஷ்மி நரசிம்மர் கோயிலில் 10நாள் ஆடிப்பூர உற்சவம் நிறைவு பெற்றது

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் புகழ்பெற்ற வைணவஸ்தலமாகவும் திவ்யதேசங்ஙளில் முக்கியமானதாக கருதப்படும் லஷ்மிநரசிம்மர்கோயில் உள்ளது.

கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி கட்ந்த10 நாட்களாக தினசரி ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் மற்றும் அர்ச்சனை, ஆராதனைகள் நடந்து வந்தது. கோயிலில் விசேஷ பூஜைகளுடன் 10 நாட்களாக விழாக்கோலம் பூண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நிறைவு நாளில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது

பின்னர், கோயில் பட்டாச்சாரியார்கள் வேதபாராயணங்கள் செய்தனர். அதனையடுத்து ஆண்டாள் நாச்சியார் பக்தோசித பெருமாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர், இருவரும் பல்லக்கில் வேதமந்திரங்கள் முழங்கியடி மேளதாளங்களுடன் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்த நாமத்தை உச்சரித்த படி வணங்கினர்..

Tags

Next Story
ai marketing future