நெமிலி கொலை வழக்கில் 6 பேர் கைது
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பள்ளூரைச் சேர்ந்த கௌதம். தனியார் கம்பெனி ஊழியரான அவரை கடந்த ஞாயிறு மாலை அதே பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது துப்புத் துலக்க சம்பவ இடத்திற்கு வேலூரிலிருந்து மோப்ப நாய் ஷிம்பா வரவழைக்கப்பட்டது, மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்துச் சென்றனர். இந்நிலையில் கொலைச்சம்பவம் பற்றி தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். பின்னர் அரக்கோணம் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் அதே பள்ளூரைச்சேர்ந்த நிஷாந்த் (20), சரத்குமார் (25), திலீப் (23), பகத்சிங் (24), மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரத்தைச்சேர்ந்த விஜயகுமார் (24),மற்றும் பார்வேந்தன் (20) ஆகிய 6 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, கடந்த 2019 டிசம்பர் 7ந் தேதி நிஷாந்தின் சித்தப்பாவும் கொலையுண்ட கௌதமனின் நண்பருமான விமல், ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்பட்டு வருகிறது அது சம்பந்தமாக கௌதமன் போதையில் விமலை, இரயிலில் தள்ளி விட்டு தான் கொன்றதாக உளறியுள்ளார். அதனையறிந்த நிஷாந்த் தனது சித்தப்பாவைக் கொன்றதாக கூறிய கௌதமன் மீதான ஆத்திரத்தில். கைதாகியுள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து யாருமில்லாத தேரத்தில் கௌதமனின் தலையில் கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியதாகத் போலீஸாரிடம் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
பின்னர் போலீஸார் கைது செய்த 6 பேரையும் அரக்கோணம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu