நெமிலி அருகே வெளி மாநில லாட்டரிச்சீட்டு விற்ற 3பேர் கைது

நெமிலி அருகே வெளி மாநில லாட்டரிச்சீட்டு விற்ற 3பேர் கைது
X
நெமிலி அருகே பனப்பாக்கத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுவிற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் மயூரா தியேட்டர் பின்புறமாக மாநில அரசு விற்பனைக்கு தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நெமிலி போலீஸாருக்கு தகவல்கிடைத்தது

தகவலின் பேரில் ,பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தடைசெய்யப்பட்ட லாட்டரிச்சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த பனப்பாக்கத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(35), சிலம்பரசன்(34),மற்றும் உதயா(எ) உதயகுமார் ஆகியோரை மடக்கிப் பிடித்தனர்

3 பேரைக்கைது செய்து அவர்களிடமிருந்து வெளிமாநில லாட்டரிச்சீட்டுகள் மற்றும் 9,500 ரொக்கம்ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!