அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நாசம்; விவசாயிகள் முற்றுகை போராட்டம்

அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நாசம்; விவசாயிகள் முற்றுகை போராட்டம்
X

போலிப்பாக்கம் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மூடியதால் விற்பனைக்கு இருந்த நெல் மூட்டைகள் நாசம் நஷ்டமடைந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலிப்பாக்கம் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மூடியதால் விற்பனைக்கு இருந்த நெல் மூட்டைகள் நாசம்.

.ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த போலிப்பாக்கத்தில் வசித்துவரும் மக்களின் பிரதானத் தொழில் விவசாயமாகும். அங்கு அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வந்துள்ளது.

எனவே அப்பகுயைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்கு கொண்டு வந்து மூட்டைகளாக அடுக்கியும், குவியல்களாக வைத்து கடந்த 3 மாதங்களாக காந்திருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொள்முதல் நிலையத்தை திடீரென மூடியதாக கூறப்படுகிறது.

இதனால், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த ₹80 லட்சம் நெல் மூட்டைகள் மற்றும் குவியல்கள் மழையில் நனைந்து வீணாகியதாகவும் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் செய்வதறியாத விவசாயிகள் அடுத்த போகத்திற்கு தங்களால் விவசாயத்தில் ஈடுபட முடியாத அளவிற்கு வறுமையில் தவித்து வருவதாகவும் கூறி வருகின்றனர். ஆகவே அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நெல்லை கொள்முதல் செய்தும், ஏற்கெனவே கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய பணத்தை வழங்கி தங்களுக்கு உதவ வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மேலும் அவர்கள் பாணாவரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த முளைத்த மற்றும் நாசமாகிய நெற்களை தரையில் கொட்டி நிவாரணம் வழங்கிட கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare