ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட செம்மரகட்டைகள் பறிமுதல்

ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட செம்மரகட்டைகள் பறிமுதல்
X

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே 1 டன் செம்மரகட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக சோளிங்கர் நோக்கி கார் ஒன்று அதிகாலை வேகமாக வந்தது.அப்போது சோளிங்கர் அருகே வேகமாக வந்த கார் சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கார் கவிழ்ந்ததில் காரில் இருந்த 4-அடி நீளம் கொண்ட 16 செம்மர கட்டைகள் கீழே விழுந்தது. இதனிடையே காரில் இருந்த இருவர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் சோளிங்கர் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் படி விரைந்து வந்த காவல் துறையினர் செம்மர கட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள் சுமார் ஒரு டன் எடை இருக்கலாம் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture