கன்டெய்னர் லாரி மின்கம்பங்களின் மீது மோதியதால் பலமணி நேரம் மின்தடை

மின் கம்பங்கள்மீது மோதிய கண்டெய்னர் லாரி
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் சிப்காட்டிலிருந்து கார் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஆந்திரா மாநிலம் அனந்தபூருக்கு நெமிலி வழியாக சென்று கொண்டிருந்தது.
லாரியை திருவள்ளூர் அடுத்த மணவூரைச்சேர்ந்த முனிசாமி(32) என்பவர் ஓட்டிவந்தார். இந்த லாரி, நெமிலி காவல்நிலையம் தாண்டி வரும்போது,, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நெமிலியில் சாலையோரமாக இருந்த மின் கம்பங்கங்களின் மோதியது .
இதில் அடுத்தடுத்து இருந்த 3மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் மின்சாரம் செல்லும் கம்பி ஒயர்களும் அறுந்த விழுந்து. மின்தடை ஏற்பட்டது. விபத்தில் லாரிடிரைவர் முனிசாமி காயமேதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.விபத்து குறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடனே அப்பகுதிக்கு வந்து மாற்று கம்பங்களை அமைத்து சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்
இதனால் நெமிலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலமணிநேரம் மின்தடை ஏற்பட்டது. மின்தடையால் பொதுமக்கள் பெரும் அவதியுற்றனர். மேலும் விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu