ராணிப் பேட்டை சிப்காட்டில் தொழிலாளர்கள் போராட்டம்

ராணிப் பேட்டை சிப்காட்டில் தொழிலாளர்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் காவல் துறையினர்

தனியார் காலணி தொழிற்சாலையில் சங்கம் அமைக்க முயன்றவர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ராணிப் பேட்டையை அடுத்த சிப்காட் பேஸ்-1 பகுதியில் தனியார் காலணி தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான சங்கம் அமைப்பதற்கான பணிகளை ஒரு சில தொழிலாளிகள் மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சாலை உள்ளே சங்கம்அமைக்க கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் சங்கம் அமைக்க முயன்ற நான்கு தொழிலாளிகளை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சங்கம் அமைக்க முயன்ற 4 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த தொழிற்சாலையை கண்டித்து, தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சிப்காட் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடமும் தொழிற்சாலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil