50 ஆண்டுகளுக்கு பிறகு நீர் கோடி போன ஏரி: கிடாவெட்டி வழிபட்ட கிராமமக்கள்
செங்காடு கிராமமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தலைமையில் ஏரிக்கோடியருகே ஏரிநீரில் நின்று மலர்தூவி வணங்கினர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள பெரிய ஏரி சுமார் 250 மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் செங்காடு, வள்ளுவம்பாக்கம், ஒழுகூர், தகரகுப்பம், வாங்கூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் மேடாக இருந்ததால், கடந்த 50ஆண்டுகளாக ஏரி நிரம்பாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் ,கடந்த சிலநாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளி யேறி வருகிறது. அதனைத்தொடர்ந்து செங்காடு ஏரியும் நிரம்பி உபரிநீர் கோடி வழியாக வெளியேறி வருகிறது.
சுமார். 50ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பி உபரிநீர் கோடிவழியாக வெளியேறுவதைக் கண்ட கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து செங்காடு கிராமமக்கள் அனைவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தலைமையில் ஏரிக்கோடியருகே ஒன்று கூடி ஏரிநீரில் நின்று மலர்தூவி வணங்கினர்.
பின்பு மஞ்சள்,குங்குமம், பூ ,தாலி,புடவை உள்ளிட்ட மங்களப் பொருடகளை வாழை இலையில் வைத்து பூஜை செய்து தண்ணீரில் விட்டு வழிபட்டனர். பின்னர் கிராமக்கள் கிடாவெட்டி விருந்து படைத்து கோலாகலமாக கொண்டாடினர். ..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu