13 ஆண்டுகளாக குழாய் வழியாக உணவு: மகனின் அறுவை சிகிச்சைக்கு உதவ ஆட்சியரிடம் மனு

13 ஆண்டுகளாக குழாய் வழியாக உணவு: மகனின் அறுவை சிகிச்சைக்கு உதவ ஆட்சியரிடம் மனு
X

ஆற்காட்டைச் சேர்ந்த சிறுவனின் உணவுக்குழாய் அறுவை சிகிச்சை செய்ய உதவிட வேண்டி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆற்காட்டைச் சேர்ந்த சிறுவனின் உணவுக்குழாய் அறுவை சிகிச்சை செய்ய உதவிட வேண்டி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டையில் ஆற்காட்டைச் சேர்ந்த சிறுவனின் உணவுக்குழாய் அறுவைசிகிச்சை செய்ய மருத்துவமனையில் ₹50லட்சம் கேட்டதால் உதவிட வேண்டி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாஸ்கரப் பாண்டியன் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. அதில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்துச்சென்றனர் .

அப்போது, ஆற்காடு நாட்டாமை ராஜ் தெருவைச் சார்ந்த சுனில் குமார், அவர் மனைவி மகாலட்சுமி மற்றும் அவர்களது மகன் மோகன்ராஜ்(13) என்பவரை மூக்கில் குழாய்செருகிய நிலையில் அழைத்து வந்து மனு அளித்தனர். அதில் தங்கள் மகன் உணவுக்குழாயில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்றும் அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதியின்மை காரணமாக உதவிகேட்டு மனு அளித்தனர்.

அதில் தங்கள் மகன் மோகன்ராஜ் பிறந்த நேரத்தில் உடல்நலக்கோளாறு ஏற்பட்டது என்றும் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவனுடைய மூச்சுக்குழாயும் உண்வுக்குழாயுடன் சேர்ந்து அழுந்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதில் அவனது மூக்கில் குழாய் வைத்து அதன் மூலமாகவே நீர் ஆகாரமாக வழங்க வேண்டும் என்றும். 13வயதுக்குப் பிறகுதான் அறுவை சிகிச்சையளித்து சரிசெய்ய முடியும் என்ற மருத்துவர்கள் கூறினார். அதன்பேரில், அவனுக்கு கடந்த 13ஆண்டுகளாக குழாய் வழியாக நீராகார உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறுவன் மோகன் ராஜுக்கு 13 வயதாகிறபடியால் மூக்கில். வைத்துள்ள குழாயை எடுத்து உணவுக்குழாய் அழுத்தத்தை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய மருத்துவமனை சார்பில் சரிசெய்ய ₹50லட்சம் செலவாகும் என்று கேட்டுள்ளதாகவும் தங்களால் பணம் செலுத்த போதிய வசதி இல்லை என்றும் தங்கள் மகனுக்கு சிகிச்சையளிக்க உதவிடகோரி மனு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!