வாலாஜாவில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

வாலாஜாவில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
X

திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

வாலாஜா ஒன்றியத்தில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில்1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஒன்றியக் குழுத் தலைவர் சேஷா வெங்டரமணன் தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளரான திமுக மாநில சுற்றுசூழல் துணைசெயலாளர் விநோத் காந்தி கலந்து கொண்டு வாலாஜா ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்பு அவர் பொதுமக்களிடையே மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பதின் நன்மைகள் குறித்து கூறினார்.

அதில் சுவாசிக்க சுத்தமான ஆக்ஸிஜனைப் பெற கட்டாயம் மரம் வளர்க்கவேண்டும். வருங்கால சந்ததியினரின் நோயற்ற தரமான வாழ்க்கையை உறுதிசெய்வது மரங்களே என்றும் மரம்உயிர்களின் ஆதாரம் என்று எடுத்துரைத்தார்.

மாவட்ட ஊராட்சி ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!