ஆற்காட்டில் சுதந்திரதின மாரத்தான் ஓட்டம்

ஆற்காட்டில் சுதந்திரதின மாரத்தான் ஓட்டம்
X
ஆற்காட்டில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழா மாரத்தான் ஓட்டத்தில் மாணவமாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 75-வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள், அமுத பெருவிழா நிகழ்ச்சியின் 5-ம் நாள் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆற்காடு டெல்லிகேட் நினைவு சின்னம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ .ஈஸ்வரப்பன் ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ஆற்காடு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!