ஒழுங்காக படிக்குமாறு தாய் திட்டியதால் மகள் தற்கொலை.

ஒழுங்காக படிக்குமாறு தாய் திட்டியதால் மகள் தற்கொலை.

தாயார் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட மாணவி யுவலஷ்மி

சிப்காட் அடுத்த நரசிங்கபுரம் அருகே ஒழுங்காகபடிக்குமாறு தாய் திட்டியதால் +1படித்து வந்த மகள் கிணற்றில் குதித்து தற்கொலைசெய்து கொண்டார்

இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை சிப்காட் அடுத்த நரசிங்கபுரம் பஞ்சாய்த்து வடகாலைச்சேர்ந்த கணபதிஇவர் இறந்து 15ஆண்டுகள் ஆன நிலையில் அவரது மனைவி பரமேஸ்வரி தனது மகள்கள் பிரேமா(19) , யுவலஷ்மி(17) ஆகியோரை கூலிவேலை செய்து படிக்க வைத்து வருகிறார்.

அதில், இளையமகள் யுவலஷ்மி +1படித்து வந்த நிலையில் பாடங்களை சரிவரபடிக்காமல் எப்போதும் செல்போன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதனைக் கண்டித்து ஒழுங்காக படிக்கும்படி தாய் பரமேஸ்வரி மகள் யுவலஷ்மியை திட்டியுள்ளார். இதனால், மனவேதனையடைந்த யுவலஷ்மி, கடந்த 2நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினார்.

உடனே , பரமேஸ்வரி மகளைத் தேடி பல இடங்களில் அலைந்த நிலையில், அதே பகுதியில்உள்ள கிணற்றில் யுவலஷ்மி சடலமாக மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையறிந்த பரமேஸ்வரியின் உறவினர்கள் யுவலஷ்மியின் சடலத்தை மீட்டனர்.

மேலும் இது குறித்து தகவலறிந்த சிப்காட் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர் பின்பு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.Tags

Read MoreRead Less
Next Story