இராணிப்பேட்டை யில் ஒலிம்பிக் வீரர்களுக்கு உற்சாக "செல்பி பாயின்ட்"..

இராணிப்பேட்டை யில் ஒலிம்பிக் வீரர்களுக்கு உற்சாக  செல்பி பாயின்ட்..
X
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒலிம்பிக் வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட ஒலிம்பிக் செல்பி பாயின்ட் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிம்பிக் வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட ஒலிம்பிக் செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட உள்ளதாக மாவட்டஆட்சியர் அறிவித்துள்ளார்

ஜப்பானின்.தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை23லிருந்து ஆகஸ்ட் 8வரையில் ஒலிம்பி விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. தமிழகத்தில் மேசைப்பந்து வீரர் சத்யன், சரத்கமல், வாள்சண்டை பவானிதேவி, பாய்மரபடகு ஓட்டுதலில் கணபதி, வருண்,தக்கர், நேத்ராகுமணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வரும் ஜூலை22 வரை "ஒலிம்பிக் செல்ஃபி பாயின்ட் " அமைத்து பொதுமக்களிடையே ஒலிம்பிக் போட்டியை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும்" 'டோக்கியோவை நோக்கி சாலை"' என்ற தலைப்பில் மத்திய அரசு அனைத்து வயதினருக்கான ஆன்லைன் வினாடிவினா போட்டியை அறிவித்துள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://fitindia.gbv.in என்ற முகவரியில்TOKYO2020Quiz ல் இணைந்து 120 வினாடிக்குள்பதலளிக்கின்ற விதத்தில் ஒலிம்பிக் பற்றிய வரலாறு முந்தைய, தற்போதைய பதக்கம்பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் சாதனைகள் விபரம் ஆகியவற்றைக் குறித்து ஆன்லைனில் வரும் 10கேள்விகளை ஒருமுறை மட்டுமே கலந்து கலந்து கொள்ளலாம்.

வினாடி வினாவில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய அணியின் டி-ஷர்ட் பரிசாக வழங்கப்படும் என்பதனையும் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்