வாலாஜாவில் ஊதியம் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
வாலாஜாவில் ஊதியம் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சிக்குட்பட்ட பகுதிகளைத் தூய்மை செய்ய 130க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கொரோனாத் தொற்று காலத்திலும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தினமும் நகராட்சிப் பகுதிகளில் சேரும் குப்கைகளை பெருக்கி சுத்தப் படுத்தி தூய்மைப்பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. அதேபோல பணியின் போது முகக்கவசம், ,கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படாமல் அவர்களை நகாராட்சி அதிகாரிகள் வேலை செய்ய வற்புறுத்தி வருவதாகவும், மேலும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பி எஃப், இஎஸ்ஐ மற்றும் கூட்டுறவு வங்கியில் ஊழியர்கள் வாங்கிய கடனின் தவணைகள் ஆகியவற்றை முறைப்படி நகரட்சி நிர்வாகம் செலுத்துவது இல்லை என்ற புகாரும் எழுந்து வருகிறது.
இது குறித்து தூய்மைப்பணியாளர்கள் பலமுறை அதிகாரிகளிடத்தில் முறையிட்டு வந்து உள்ளனர். இருப்பினும்நடவடிக்கை எதுவும் எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இன்று காலை தங்கள் பணிகளை புறக்கணித்து நகராட்சி அலுவலகம் முன்பாக அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊரடங்கு விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் சமூக இடைவெளியின்றி கொரோனா நோய் தொற்று பரவும் விதமாக தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu