மயானக்கொள்ளையில் அசம்பாவிதங்களை தடுக்க கட்டுப்பாடுகள்: கலெக்டர் அறிவிப்பு

மயானக்கொள்ளையில்  அசம்பாவிதங்களை தடுக்க கட்டுப்பாடுகள்: கலெக்டர் அறிவிப்பு
X

பாலாற்றில் நடைபெறும் மயான கொள்ளை (கோப்புப்படம்)

இராணிப்பேட்டையில் மயானக் கொள்ளையை அசம்பாவிதமின்றி ,கொரோனா விதிகளை மதித்து நடத்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அசம்பாவிதங்கள், மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் படி மயானக்கொள்ளை விழாவினை நடத்துமாறும், அதிகாரிகள் விழாவினை கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண்டாடி வரும் மயானக்கொள்ளை விழா இந்த ஆண்டு வரும் மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது

விழாக்குழுவினர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள்

தமிழக அரசு தெரிவித்துள்ள கொரோனா தொற்று தடுப்பு விதிகள் மற்றும் அனைத்து நெறிமுறைகளை, விழாக்குழுவினர் பக்தர்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

மயானகொள்ளை விழாவில் தேர், சாமி சிலை அகலம், உயரம் 10 அடிக்குள்ளும் சாமி சிலை அமைக்கப்பட்ட வாகனங்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் மின் சாதனப் பொருட்களுடன் வரும் அலங்கரிப்புகளை தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்யவேண்டும். மேலும், அவற்றில் முதலுதவி பொருட்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விழாவில் கூம்பு ஒலிபெருக்கி தவிர்த்து பெட்டி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி ஒலியின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்க வேண்டும்.

விழாக் குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படக்கூடாது, மின் திருட்டு செய்திடல், பொது அமைதிக்கு, பாதுகாப்பிற்கு, மதசார்பின்மையை பாதிக்காத வகையில் வருவாய், காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்

ஊர்வலங்கள் பகல் 12 மணிக்குள் ஆரம்பித்து, 3.மணிக்குள் காவல் துறை அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களுக்கு இடையூறு இல்லாதவகையில் செல்ல வேண்டும்.

சுவாமி சிலை ஊர்வலமாக மினிலாரி , டிராக்டர்மூலமாக மட்டும் செல்லவேண்டும். மாறாக மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அனைத்தும் மோட்டார் வாகனச் சட்டம் 1988இன்படி மட்டுமே அனுமதிக்கப்படும்.

மயானக் கொள்ளையொட்டி காவல் துறை அனுமதித்த நிகழ்வுக்கு பக்தர்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மயானக் கொள்ளை நிகழ்ச்சி முடித்து பாலாற்றில் இருந்து மாலை 5.,மணியிலிருந்து 7.மணிக்குள் கோயில் நிலைக்கு திரும்பி அனைத்து இரவு நிகழ்வுகளையும் முடித்துக்கொள்ள வேண்டும்.

ஊர்வலத்தின் போது பூ அலங்காரங்கள், அலங்காரப்பொருட்கள் யாவும் மறுசுழற்சி முறையிலான பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். நெகிழி (Plastic) பொருட்களை தவிர்க்கவேண்டும்.

பின்பு நிறைவடைந்த விழாவில் பயன்படுத்தப்பட்டவைகள் 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஊராட்சி, பேரூர், நகராட்சிகளின் பணியாளர்கள் விழாவில் குவிக்கப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும். காவல் துறையினர் ஒதுக்கிய நேரத்திற்குள் ஊர்வலத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

மது அருந்தி விழாக்குழுவினர்கள் மயானக் கொள்ளையில் கலந்துக் கொள்ளக்கூடாது. சட்டம்,ஒழுங்கிற்கு ஊறு விளைவிப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும். பிற வழிபாட்டுதலத்தின் முன் ஊர்வலத்தை நிறுத்திவிட்டு, மேளதாளங்களை அதிக சத்தத்துடன் அடிக்கக் கூடாது.

ஊர்வலம் ஆற்றை நோக்கி செல்லும் போதும், திரும்பும் போதும் சாலையின் இடது பக்கமாக மட்டுமே செல்ல வேண்டும். வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்லக்கூடாது.

தேவையில்லாமல் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கோ இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட், சீரியல் செட் போன்றவற்றை பொது இடங்களில் அமைக்கக் கூடாது.

விழாக்குழுவினர் பாரேனும் வீண் கலாட்டா மற்றும் சச்சரவு போன்றவற்றில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று காவல்துறையினர், வருவாய்துறையினர் மற்றும் விழா குழுவினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!