பொன்னையாற்றில் இரயில் பால பணிகள் நிறைவு: ரயில்கள் இயக்கம்
விரிசல் ஏற்பட்டுள்ள பாலத்திற்கு அடியில் இரும்பு கிரிப்பர்கள் அடுக்கி வைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது
இராணிப்பேட்டை மாவட்டம. ஒட்டியுள்ள பொன்னையாற்றில் சுமார் 1865 ஆண்டில் 55 கண்கள் கொண்டு 511.84 மீட்டர்நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள பழமையான இரயில்வே பாலம் பாதிப்படைந்து 38,39 மற்றும் 40 வது தூண்களுக்குக்கு இடையே விரிசல் ஏற்பட்டது அதை தொடர்ந்து சீரமைப்பணிகளை போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. அதன் காரணமாக சென்னை - காட்பாடி மற்றும் காட்பாடி-சென்னை ஆகிய பாதைகளில் செல்லும் 26 இரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பாலத்தை சீரமைக்கும் பணிகளில் கடந்த 4 நாட்களாக இரயில்வேஊழியர்கள் இரவுப்பகலாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் ,25ந்தேதி சென்னைகோட்ட மேலாளர் கணேஷ் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர் . பின்னர் , சென்னை கோட்டமேலாளர் கனேஷ் அங்கேயே இருந்து பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் ,பாலத்தை பணிகள் விரைந்து முடிக்க முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் பால பாதிப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்வதாகவும் பாலம் பாதிப்படைந்துள்ளதையறிந்து வந்து கடந்த 3 நாட்களாக தன்னுடைய தலைமையில் ஊழியர்கள் இரவுப்பகலாக விரைந்து பணியாற்றி வருகின்றனர் . பணிகள் விரைந்து முடிக்க துரிதப்படுத்தி யுள்ளோம் பாலத்தின் மேற்படிபணிகளை துறைரீதியாக பொறியாளர்கள் குழு ஆலோசிக்கப்பட்டு வருகிறது . பணிகள் முடித்த பிறகே ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாககூறினார்.
4வது நாளாக தொடர்ந்த பணிகள் நேற்று இரவு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பாலத்தில் இன்ஜினை ஓடவிட்டு பார்க்கப்பட்டது. அதில் பாதிப்பு ஏதும் ஏற்படாததைத் தொடர்ந்து 1050 டன் காலி டேங்கர் சரக்கு ரயில், 2200டன் சரக்கு கண்டெயனர் ரயில்கள் ஓடவிடப்பட்டது .பின்பு ,பயணிகள் இரயிலை இயக்கினர். அதில் பாதிப்புகள் ஏற்படாததைத் தொடர்ந்து மற்றொரு பயணிகள் விரைவு ரயிலும் இயக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் செய்தியாளர்களிடம், கடந்த மாதம் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் அரிப்புகள் ஏற்பட்டு பாலத்தில் 38,39 கண்களில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது. அன்று முதல் இரயில்கள் ரத்து செய்யப்பட்டு இரவு பகலாக ஊழியர்கள் கடந்த 4 நாட்களாகப் பணியாற்றினர். விரிசல் ஏற்பட்டுள்ள பாலத்திற்கு அடியில் இரும்பு கிரிப்பர்கள் அடுக்கி வைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பின்பு, குறைந்த வேகத்தில் ரயில்களின் சோதனை ஓட்டங்கள் நடத்தியதில் பாலத்தில் பாதிப்புகள் காணப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பின்னர் அவர் பாலத்தில் ரயில்கள் அனைத்தும் இயங்கும் அவைகளை 5 கிமீ வேகத்தில் இயக்க ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu