இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியது பேருந்து போக்குவரத்து
அரக்கோணம் பேருந்து நிலையம்
தமிழகத்தில கொரோனா2வது அலை தொற்றுகாரணமாக அரசு கடந்த மே மாதம் 10ந்தேதி முதல் முழுஊரடங்கு அறிவித்தது அதன் காரணமாக மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது நோய்த்தொற்று குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது
இராணிப்பேட்டை மாவட்டம் உட்பட 11மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள ஆற்காடு ,சோளிங்கர் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 62 நகர மற்றும் 31 புறநகர் பேருந்துகள் சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு காலை 6 மணி முதல் ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர் மற்றும்,கலவை, பேருந்து நிலையங்களிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் நகரப்பேருந்து மற்றும் வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் வேலையிருந்தும் செல்லமுடியாமல்அவதிபட்டு வந்தவர்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தவர்கள் என போக்குவரத்து நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu