பான்-குட்கா- கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும்: எஸ்பி எச்சரிக்கை

பான்-குட்கா- கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும்: எஸ்பி எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபாசத்தியன்

பான் குட்காமற்றும் கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்பி எச்சரித்தார்

பான், குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் எஸ்பி எச்சரிக்கை.

வாலாஜாப்பேட்டையில் பான், குட்கா, போதை வஸ்துகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த மளிகைக் கடையதிபரைக் கைது செய்து குட்காப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை பதுக்கிவைத்து மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி தீபாசத்தியனுக்கு தகவல் கிடைத்தது.

அவற்றை ஒழிக்கும் நடவடிக்கையாக கலவைக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் மாவட்ட முழுவதும் பல இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாலாஜாப்பேட்டை நரசோஜிராவ் தெருவில் உள்ள மளிகைக்கடையில் சோதனையிட்டனர். கடையில் ரூ,12ஆயிரம் மதிப்புள்ள 26கிலோ பான் மற்றும் குட்காப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததை கண்டெடுத்து பறிமுதல் செய்தனர் .மேலும் கடை உரிமையாளர் ஜீவாராமைக் வாலாஜா போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இது தொடர்பாக, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா விற்பனைத் தொழிலில் யாரேனும் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Tags

Next Story