மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அடிக்கல் நாட்டுவிழா: அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அடிக்கல் நாட்டுவிழா:  அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு
X

விசி மோட்டூரில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நீர்தேக்கத்தொட்டி அமைக்க நடந்த பூமி பூஜையை   ஊரகத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

விசி மோட்டூரில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்க நடந்த பூமி பூஜை விழாவை ஊரகத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் விசி மோட்டூரில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்கத்தொட்டி கட்டுமானம் பணி அடிக்கல் நாட்டு விழா நடந்தது

விழாவில், அமைச்சர் காந்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார் விழாவில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மேல்நீர் தேக்கத்தொட்டிக் கட்டுமானப் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்

பின்னர் அவர் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட கடப்பேரியில் தேசிய ஊரக வேலைவாயப்பு உறுதி திட்டத்தில் நடக்கும் பணிகள் மற்றும்இராமாபுரத்தில் நடந்து வரும் ஓடை உறிஞ்சி குழி அமைத்தல் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் தென்கடப்பந்தாங்கலில் ரூ10லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 1லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைநீர் தேக்கத் தொட்டியை குடிநீர் விநியோகத்திற்கு துவக்கி வைத்தார்

Tags

Next Story
the future of ai in healthcare