விபத்துகளைத் தவிர்க்க சாலை விதிகளை மதிக்க வேண்டும்: கலெக்டர்

விபத்துகளைத் தவிர்க்க சாலை விதிகளை மதிக்க வேண்டும்: கலெக்டர்
X

இராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

சாலை விபத்துகளைத் தவிர்க்க பாதுகாப்பு விதிகளை மதித்து வாகனங்கள் ஓட்டவேண்டும் வேண்டும் என இராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்

இராணிப்பேட்டை மாவட்டகலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியநெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டங்களை இணைக்கும் சாலைகளில் அவ்வப்போது நடக்கும் அபாயகரமான விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு, இதனால் பல குடும்பங்களில் ஆதரவற்ற சூழல் நிலவுகிறது. எனவே, விபத்துகளைத்தவிர்க்க சாலைப்பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கவனத்துடன் வாகனங்களை இயக்கவேண்டும்.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் விபத்துக்குக் காரணமானவர்களின் உரிமம் மீது நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் குறித்து உத்தரவுகள் வழங்கியுள்ளது. அதன் அடிப்பையில் விபத்து ஏற்படுத்துபவர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்கள் தற்காலிகமாக (அ) முற்றிலும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அதேபோல வாகனங்களின் அனுமதி சீட்டின்மீதும் தற்காலிக தகுதியிழப்பு மற்றும் நிரந்தரமான ரத்து நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கரம் ,இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்து இயக்கவேண்டும். அதிவேகங்களைத் தவிர்த்து சாலையில் நிர்ணயித்துள்ள வேகங்களில் செல்ல வேண்டும். கண்கூசும் அளவிற்கு ஒளிரும் விளக்குகளை வாகனங்களில் பொருத்துதல் கூடாது .

தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிள், இலகுரகம் மற்றும் கனரக வாகனங்கள் என பிரிக்கப்பட்ட வரிசைகளில் செல்லவேண்டும். மாறிச்செல்லும்போது முன்கூட்டியே உரிய சமிக்ஞைகளை செய்து மாற வேண்டும் . கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கக்கூடாது, மது அருந்திவிட்டு ஓட்டக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது . சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பாரங்களை தவிர அதிகம் ஏற்றக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!