அரசுப் பள்ளியில்புதிய வகுப்பறைக் கட்டிடம்: அமைச்சர் திறந்து வைப்பு

அரசுப் பள்ளியில்புதிய வகுப்பறைக் கட்டிடம்:  அமைச்சர் திறந்து வைப்பு
X

தெங்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் காந்தி 

தெங்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டையடுத்த தெங்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ,9லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்படுள்ள வகுப்பறை திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு மாவட்டாட்சியர் பாஸ்கரபபாண்டியன் தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் காந்தி கலந்து கொண்டு வகுப்பறையை திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், தெங்கால் ஊராட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகும். தற்போதய தலைவரும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகின்றார்.

இங்கு மக்களின் கோரிக்கையை ஏற்று தெங்காலையொட்டியுள்ள பாலாற்றில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும். இந்தக் கிராம சாலையில் வாகனங்கள் செல்வது அதிகரித்து உள்ளது. எனவே இந்த சாலை தெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

திறப்பு விழாவில். மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கடரமணன், துணைத்தலைவர. ராதாகிருஷ்ணன் ,தெங்கால் ஊராட்சிமன்றத் தலைவர் இந்திரா ஆகியோர்கலந்து கொண்டனர்

விழாவில் முன்னதாக அமைச்சர் பகுதிநேர கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்