பாலாற்றில் நண்பருடன் குளித்துக் கொண்டிருந்த மெக்கானிக் நீரில் மூழ்கி பலி

பாலாற்றில் நண்பருடன் குளித்துக் கொண்டிருந்த மெக்கானிக் நீரில் மூழ்கி பலி
X

பைல் படம்.

வாலாஜாப்பேட்டை பாலாறு அணைக்கட்டில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மெக்கானிக் நீரில் மூழ்கி பலியானார்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை யடுத்த தேவதானத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(27) டூவீலர் மெக்கானிக்கான இவருக்கு திருமணமாகவில்லை. இவர்,அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன் வாலாஜாப்பேட்டையருகே உள்ள பாலாறு அணைக்கட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென சதீஷ் நீரில் மூழ்கி வெகு நேரமாகியும் வெளியே வராமல் காணாமல் போனார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே வாலாஜாப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் இராணிப்பேட்டை தீயணைப்புமீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்து அங்கு வந்த மீட்பு படையினர் சதீஷை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். மேலும் அரக்கோணத்திலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சதீஷைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இருமீட்பு படையினரின் நீண்டநேர தேடுதலுக்குப்பிறகு சதீஷ் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். இது குறித்து வாலாஜாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!