ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணி 7 மையங்களில் துவங்கியது.

ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 6,9ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக 7ஒன்றியங்களில் உட்பட்ட கிராமங்களில் 1410 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

திமிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கலவை ஆதி பராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6 சுற்றுகளில் எண்ணிக்கை நடக்கிறது.

ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் ஆற்காடு ஜிவிசி கல்வியியல் கல்லூரியில் 5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறதுவாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில்

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 4 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 5 சுற்றுகளாக நடக்கிறது.

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்ஸ்ரீ சப்தகிரி பொறியியல் கல்லூரியில் 4 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கைநடக்கிறது

நெமிலி ஊராட்சி ஒன்றிய வாக்குகள்பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது

சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது

இந்த ஏழு ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சுமார் 2811 வாக்கு எண்ணும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்

இந்த ஏழு ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்தியன் தலைமையில் 950 போலீசார் 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story