ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொறுப்பேற்றுபு

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொறுப்பேற்றுபு
X

மாற்றுத்திறனாளியின் குறைகளை கேட்கும் சரவணகுமார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 14ஆயிரத்து 970பேர் உள்ளனர். அவரகளின் உதவித்தொகை மற்றும் நலதிட்டங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், மாற்றுதிறனாளிகளின் அலுவலகம் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகமாக வேலூரில் இயங்கி வந்தது. இதனால், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே மாற்றுத்திறனாளிகளின் அலுவலகம் திறக்க கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த சில நாடகளுக்குமுன்பு அலுவலகம் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலராக சரவணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர், சரவணகுமார் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சாரபில் வழங்கப்படும் நலதிட்டங்களை உடனுக்குடன் பெற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்படும். .அதே போல, மாற்றித்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை இடைத்தரகர்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.

மாற்றிதிறனாளிகளின் குறைகளைக் கேடறிந்த அவர், குறைகளை நேரடியாகவே அலுவலகத்திறகு வந்து தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil