வாலாஜாபேட்டையில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கப்பட்டது

வாலாஜாபேட்டையில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கப்பட்டது
X

வாலாஜா நாகமுனிமுரளி சாமியார் சாலையோரவாசிகளுக்கு பிரியாணி பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்

வாலாஜாபேட்டையில் நாகமுனிமுரளி சாமியார் மற்றும் திருநங்கைகள் சார்பில் 300சாலையோர வாசிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

வாலாஜாபேட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த நாகமுனி முரளி சுவாமியுடன் திருநங்கைகள் சேர்ந்து வாலாஜாவை சுற்றியுள்ள சாலையோர வாசிகளுக்கு பிரியாணி, தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்

தமிழகத்தில் கொரானா தொற்று காரணமாக தளர்வுகளின்றி முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்த நிலையில் உள்ளனர். அவர்களைக்கண்டு சமூக ஆர்வலர்கள் பலர் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வாலாஜா பெரியார் நகரைச்சேர்ந்த நாகமுனி முரளி சாமியார் மற்றும் அங்குள்ள திருநங்கைகள் சந்தியாகாந்தி ராமு, கார்த்திக் சரத் ஆகியோர் சேர்ந்து வாலாஜாப்பேட்டையையொட்டி வீடுகளின்றி சாலை ஓரத்தில் வசித்து வரும் சுமார் 300 க்கும்மேற்பட்டோருக்குபிரியாணி பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நாகமுனிமுரளி சாமியார் சாலையோரவாசிகளுக்கு பிரியாணி பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!