வீடுகளில் வெள்ளம் புகுந்து தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு

வீடுகளில் வெள்ளம் புகுந்து தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு
X

வெள்ளத்தில் சிக்கியவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்

வாலாஜாப்பேட்டை அருகே தேவதானத்தில் வீடுகளில் வெள்ளம் புகுந்து தத்தளித்து வந்தவர்களை படகு மூலம் தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வன்னிவேடு அடுத்த தேவதானம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது .

இதனால் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இது குறித்து. தகவல் அறிந்த இராணிப்பேட்டை தீயணைப்பு மீட்புப் படையினர் அங்கு சென்று . வீடுகளில் இருந்தவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டு அருகிலுள்ள முகாமில் தங்க வைத்தனர்.

Tags

Next Story