ஆற்காடு அருகே பிரபல தனியார் துணிக்கடையில் மின்கசிவால் தீ விபத்து

ஆற்காடு அருகே பிரபல தனியார் துணிக்கடையில் மின்கசிவால் தீ விபத்து
X
ராணிப்பேட்டை மாவட்டம் - தனியார் துணிக்கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் புதிய ஆடைகள் தீயில் கருகி நாசமானது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் இரண்டு கோடி மதிப்பிலான புதிய ஆடைகள் தீயில் கருகி நாசமானது.

ஆற்காடு பேருந்து நிலையம் அருகே 4 அடுக்கு மாடிகளைக்கொண்ட பிரபல தனியார் துணிக்கடை செயல்பட்டு வருகின்றது. இந்த துணிக்கடையில் இரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடையின் வாயிலில் பற்றி எறிந்த தீ சற்று நேரத்தில் கடையின் அனைத்து பகுதிகளிலும் மளமளவென பரவியது. இதன் காரணமாக சாலை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

இதனையடுத்து சம்பவ தீயணைப்பு துறை மற்றும் ஆற்காடு காவல் நிலையத்திற்க்கு தகவல் அளிக்கப்பட்டது .தீ விபத்து குறித்து தகவல் அறிந்த ஆற்காடு போலீஸார் மற்றும் ஆற்காடு, தீயணைப்பு துறையினர்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதற்கட்டமாக மின்சாரத்தை துண்டித்து தீயை அணைக்கும் பணியைத் துவங்கினர்


தீ கட்டுக்குள் வராத காரணத்தினால் அருகிலுள்ள ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் 30 மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்த சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

இந்த தீ விபத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி மதிப்பிலான புதிய ஆடைகள் தீயில் கருகி நாசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பு சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து தீயணைப்பு அதுகுறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!