திமுகவை பார்த்தே அறிக்கை விடுகிறார்: ஸ்டாலின்
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில், ராணிப்பேட்டை ஆர்.காந்தி, ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன், சோளிங்கர் முனிரத்தினம், அரக்கோணம் கெளதம்சன்னா ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தலுக்காக மட்டும் உங்களை தேடி வருபவன் நான் அல்ல,எந்த சூழலிலும் உங்கள் சுகதுக்கங்களில் பங்கேற்பவன் நான் என்றார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தாலே இயற்கை பேரிடர்கள் வருவதாகவும், சுனாமி, தானே புயல், 2016ல் வறட்சி, ஒக்கி புயல், கஜாபுயல், நிவர் புயல்,புரவி புயல் ஆகிய பேரிடர்கள் வந்தன. இதில் மக்களை காக்க அதிமுக அரசு தவறிவிட்டது. சாமி சிலை கடத்தியவர்களை காப்பாற்றிய ஆட்சி எடப்பாடி ஆட்சி, பொன்மாணிக்கவேலுக்கு பல துன்பங்களை தந்தது அதிமுக. அவர்களுக்கு கடவுள் துணை நிற்பாரா என கேள்வி எழுப்பினார். பேரிடர் காலங்களில் மத்திய அரசிடமிருந்து உரிய நிதியை பெற அதிமுக அரசு தவறிவிட்டது, மக்களை நேரில் சந்திக்கக் கூட வரவில்லை எனவும்,505 உறுதிமொழிகளை
சொல்லியுள்ளோம். தொழில் வளர்சிக்கு கொரோனாவில் மூடிய தொழிற்சாலைகள திறக்க 15,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்,தொழில் நிறுவனத்தை காக்க தனிக்குழு அமைக்கப்படும்,தொழிலாளர் நலவாரியம் முழுமையாக செயல்படுத்தப்படும் என வாக்குறுதிகளை பட்டியலிட்டார். வேளாண் திருத்த சட்டமசோதாவை ஆதரித்தது அதிமுக, பாமக. ஆனால் தற்போது தேர்தல் அறிக்கையில் வேளாண் மசோதாவை திரும்ப பெறுவதாக போலி வாக்குறுதியளித்துள்ளனர்.தூத்துக்குடியில் 13 பேரை சுட்டவர்களை கடவுள் காப்பாற்றுவாரா? திமுக பொறுப்பேற்ற முதல் கூட்டத்தில் வேளாண் மசோதா ரத்து செய்ய தீர்மானம் இயற்றப்படும் எனவும்,விவசாயத்திற்கு திட்டம் தீட்ட தனிக்குழு.
திமுகவை பார்த்தே எடப்பாடி அறிக்கை விடுகிறார். சூப்பர் ஸ்டார் சொல்லும் ஆண்டவன் சொல்றான், இந்த அருணாச்சலம் செய்றான் என்பது போல் ஸ்டாலின் சொல்றான் அவர் செய்றான் என விமர்சித்தார்.விவசாய கடன் தள்ளுபடிக்கு வெறும் 5000 கோடியை ஒதுக்கியது அதிமுக, மீதி 7000 கோடி ரூபாயை ஒதுக்கப்போவது நாம் தான்.மக்களை நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றுகிறீர்கள் கொரோனாவை தடுக்க அனைவரும் மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும்.ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 4000 ரூபாய் ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தாளன்று வழங்கப்படும். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றார்.ராணிப்பேட்டையில் நவீன வசதியுடன் புதிய பேருந்து நிலையம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி,வேளாண் கல்லூரி, சோளிங்கரில் ரோப்கார், அரக்கோணத்தில் மேம்பாலம், ஆற்காட்டில் அரசு கலைக்கல்லூரி, புறவழிச்சாலை அமைக்கப்படும் என பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu