சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் மேளா: கலெக்டர் அறிவிப்பு

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் மேளா:  கலெக்டர் அறிவிப்பு
X
மானியங்களுடன் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் மேளா நடைபெறுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்

மாநில அளவில் இயங்கி வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சிறு குறுமற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கும், தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் உறபத்தியை பெருக்குவதற்கும் கடனுதவி அளித்து வருகிறது.

அதன் கிளை அலுவலகம் வேலூரில் வாசன் (ENTகேர்) மையத்தில் முதல்தளம், 73/A, காட்பாடி மெயின் ரோடு, காந்தி நகர், வேலூர் 632006 என்ற முகவரியில் இயங்கி வருகிறது .

தற்போது குறு,சிறு, நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 27-8-2021வரை நடைபெறுகிறது.

சிறப்பு தொழில் கடன் மேளாவில் டிஐஐசி (TIIC)யின் பல்வேறு திட்டங்களாக மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், (மூலதன மானியம், 6சதவித வட்டி மானியம் உள்ளிட்ட இதர மானியங்கள்) புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) ஆகியவற்றிற்கான விளக்கங்கள் தரப்படுகிறது..

அதில், தகுதி பெறும் தொழில்களுக்கு முதலீட்டு மானியம் 25 லட்சத்திலிருந்து 50லட்சம் வரை மாநில அரசு மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே கடன் மேளா முகாமில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆயவுகட்டணத்தில் 50சதவீதம் சலுகை அளிக்கப்படும். மேலும்,NEEDSதிட்டத்தில்ஆய்வுக் கட்டணம் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், தொழில்திட்டங்களுடன் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கடனுதவி பெற்று பயனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 0416-2249821,2249861,என்ற தொலைபேயில் தொடர்பு கொள்ளுமாறு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்..

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு