கொரோனாதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா 3வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
அதன், அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் (ஒரு வாரத்திற்கு) 1-8-2021 முதல் 7-8-2021 வரை தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகாரிகள் செயல்படுத்தும் உத்தரவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது
அதில், முதல்நாளில், சுவரொட்டிகள், ஒட்டி,துண்டுபிரசுரங்கள் விநியோகித்து சிற்றேடுகளைை பொதுமக்களிடம் வெளியிட்டு வழங்கிடவேண்டும். சமூக வலைதளங்களில் twitter, face book, இன்ஸ்டாகிராம் மூலம் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் உரையாடல் நிகழ்ச்சி (talk show) ஆகியவற்றில் விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
2வது நாள், பேருந்து நிலையம்,இரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி அவசியம் பற்றி விளக்கி,முகக்கவசம் அணிந்து, சோப்பு போட்டு கைக்கழுவி விளக்கிக் காட்ட வேண்டும்.
3வது நாளன்று வணிக நிறுவனம், சங்க நிர்வாகிகளிடம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம், நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு உருவாக்க வேண்டும்
4வது நாளில், சுங்கச்சாவடி நெடுஞ்சாலை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா விழிப்புணர்வு பற்றிய குறும்பட நிகழ்சிகள் நிகழ்த்திக் காட்ட வேண்டும்.
பின்னர், மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியூட்டும் மாத்திரையான AMaicura மாத்திரைகளை வழங்கி, பாதுகாப்பான கபசுரக்குடிநீரை வழங்க வேண்டும்.
5வது நாளில் இணைய வழி விழிப்புணர்வு. விளம்பரங்கள் வழியாக வாசகம் எழுதிய போட்டி மற்றும்
6வது நாளன்று மாணவர்களிடையேகொரோனா விழிப்புணர்வு வினாடி வினா நடத்தி விழிப்புணர்வு பிரசசாரம் செய்யவேண்டும் .
பின்பு,செயல்பாடுகளின் இறுதியான 7ஆம் நாளான்று கிராமங்கள் பேரூராட்சி, நகராட்சிஅனைத்து வார்டுபகுதிகளில் பொதுமக்களிடம் 100% தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இலக்கை அடைவதால் அவற்றிற்கு மக்களிடையே வாழ்த்து தெரிவித்தல் ஆகிய செயல் பாடுகளை செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட்டாட்சியர்கள்,நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள்,பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார மருத்துவர்கள் மற்றும் மகளிர்குழுக்கள் ஆகியோரை செயல்படத்தும் அதிகாரிகளாக மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களில் மக்கள் கூடும் இடங்களான வட்டாட்சியர் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், சாலை சந்திப்புகள் மற்றும் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செயல்படுத்த அதிகாரிகளை அட்டவணைப்படி மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது
அதன் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியரகள், நகராட்சிஆணையர்கள்,பேரூராட்சி செயல்அலுவலர்கள் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை விழிப்பிணர்வு பிரச்சாரங்களை செயல்படுத்தி அவற்றின் ஒருவாரகால அறிக்கைகளை புகைப்படங்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை தனிவட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டுமேன இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu