ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்
ராணிப்பேட்டையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ,உதவி தேர்தல் அலுவலர்கள், மற்றும் தேர்தல் தொடர்பு பணி அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடத்தது..
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி உரையாற்றினார. அதில்,உச்ச நீதிமன்ற ஆணையின்படி, இராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிதேர்தலை நடத்தும் பணியினை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
தேர்தல் சட்டசபை தேர்தல் போல இருக்காது, தேர்தல் பஞ்சாயத்து தலைவர் ,வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் ஆகியவற்றிற்கானது என்பதால் அதிகம் போட்டியிடுவார்கள் அதனால். பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை சரிசெய்து சிறப்பாக பணியாற்றி தேர்தல் நடத்த அலுவலர்கள் ஆயத்தமாக வேண்டும்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில்உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில், 2220 கிராம வார்டுகள், 288 பஞ்சாயத்து தலைவர்கள், 127 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 13 மாவட்டக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் இரண்டு கட்டமாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாவட்டத்தில் 1410 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சீட்டுகள் நான்கு விதமாக பயன்படுத்தப்பட உள்ளது. பின்னர் மறைமுக தேர்தல் மூலம், பஞ்சாயத்து துணைத் தலைவர், ஒன்றியக் குழுத்தலைவர், துணைத்தலைவர், மாவட்டக் குழுத்தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் .
கிராமப்பஞ்சாயத்து தலைவர், மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகள் கட்சி சின்னங்களின்றியும் மற்றவற்றிற்கு தேர்தல் கட்சி சின்னங்களின் அடிப்படையில் நடக்கும்.
எனவே ,நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை அலுவலர்கள் பணியினை தொடங்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள், சாய்தளம் அமைத்தல், குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வசதிகளின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்யவேண்டும்
மேலும் மாவட்டத்தில் 452 பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பினை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
காவல் துறையினர் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்து கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஆய்வு செய்து அவற்றிற்கேற்ப பாதுகாப்பை அதிகரித்தும் வாக்குச்சீட்டு அச்சிடும் மற்றும் ஏனைய பணிகளுக்குஉரிய பாதுகாப்புகளை வழங்கிடவேண்டும், வாக்குபெட்டிகள் மற்றும் தேர்தல் பொருட்களை, ஆவணங்களை கொண்டுச செல்லவும், தேர்தலின்போதும், போதுமான காவலர்களை பாதுகாப்பிற்கு நியமிக்க வேண்டும் என்றார்
தேர்தல் நடத்தும். அலுவலர்கள் எந்தவிதப் பிரச்சினைகளுமின்றி சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ். அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்..
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், திட்டஇயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், வேளாண்மை இணை இயக்குநர் வேலாயுதம், கோட்டாட்சியர்கள் இளவரசி, சிவதாஸ், மற்றும் காவல் துணைகண்காணிப்பாளர்கள், மற்ற துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu