மழைவெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளை கலெக்டர் ஆய்வு

மழைவெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளை  கலெக்டர் ஆய்வு
X

வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பாதிப்புகள் ஏற்படும் இடங்களுக்குச் இரவு முழுவதும் சென்று கலெக்டர் ஆய்வுசெய்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மாவட்டஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளான ஆற்றங்கரையோரப் பகுதிகள், தாழ்வான மற்றும் குடிசை வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார் .

அப்போது மண் சுவர் வீடுகளில் வசிப்பவர்கள் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, ஆற்காடு மற்றும் கலவை வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும், மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்புகளில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தங்குகிறார்களா என திடீர் ஆய்வு மேற் கொண்டார். பின்பு அவர்கள் தங்கியிருப்பதை உறுதி செய்த அவர் ,கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மழை மற்றும் வெள்ள காலத்தில் பணியாற்ற வேண்டிய அறிவுரைகளை வழங்கினார் .

அதனைத் தொடர்ந்து, சிலகிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கினார். இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் உள்ளனர். மேலும் மழை நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்