உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
உலகத் தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறையின் சார்பில் உலக தாய்ப்பால் வார தின விழா நடந்த்து
முதலில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் குழந்தைகள் பராமரிப்பு தாய்ப்பால் அவசியம் குறித்த கண்காட்சியினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர், தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் விழாவில் பேசியதாவது:
உலக தாய்ப்பால் வார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது. திட்டத்தின் முக்கிய நோக்கம், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பிறந்த ஆறு வரையுள்ள குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது ஆகும். குழந்தையின் முக்கிய உணவு தாய்ப்பால், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் கட்டாயம் தாய்ப்பால் அளிக்க வேண்டும். முதன்முதலில் சுரக்கும் சீம்பால் நோய் எதிர்ப்பு சக்தியையும் குழந்தைகளுக்கு வழங்குகின்றது .குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் கிடைக்கின்றது என்று கூறினார்.
மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறை 8 வட்டாரங்களில் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu