மேல்விஷாரத்தில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்: கலெக்டர் வழங்கினார்

மேல்விஷாரத்தில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்:  கலெக்டர் வழங்கினார்
X

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் 

மேல்விஷாரம் நேஷனல் வெல்பர் அசோசியேஷன் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை கலெக்டர் வழங்கினார்

இராணிப்பேட்டை மாவட்டம் திநேஷனல் வெல்பர் அசோசியேஷன்,மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் கொரோனா தடுப்பு சித்த மருந்து கபசுரகுடிநீர் மற்றும் முக்க்கவசங்கள் முக கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

நிகழ்ச்சிக்கு தலைவர் முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கினார் .

அப்போது அவர் கொரோனா தடுப்புவிதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார் .

கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் நோய்த்தொற்றிலிருந்து முற்றிலும் தற்காத்துக் கொள்ள முடியும், மேலும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் அவசியம் என்றும் கூறினார்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ரகுநாதன் மற்றும் சரவணன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கபசுரக்குடிநீரை வாங்கி அருந்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!