நிரம்பாத ஏரிகளுக்கு நீர் செல்லும் வழிகளை ஏற்படுத்த தலைமைப் பொறியாளர் உத்தரவு

நிரம்பாத ஏரிகளுக்கு நீர் செல்லும் வழிகளை ஏற்படுத்த தலைமைப் பொறியாளர் உத்தரவு
X

பாலாறு அணைக்கட்டில் ஆய்வு மேற்கொண்ட நீர் ஆதாரத்துறை தலைமை பொறியாளர் 

வாலாஜா, பாலாறு பகுதிகளில் சென்னை மண்டல நீர் ஆதாரத்துறை தலைமைப்பொறியாளர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்ட போது இவ்வாறு கூறினார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர் ஆதாரத்துறையின் கீழ் மொத்தம் 369 ஏரிகள் உள்ளது.

அவற்றில் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் உட்பட 167 ஏரிகள் நிரம்பி முழுக்கொள்ளவுடன் நிரம்பி உள்ளது மீதமுள்ளவற்றில்18 ஏரிகளில் சுமார் 75%மும், 37 ஏரிகளில் 50%, 69 ஏரிகளில் 25%, 78 ஏரிகள் 25% க்கு கீழும் நீர்இருப்பு உள்ளது.

மேலும் தற்போது பெய்து வரும் தொடர்மழைக் காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன..

இந்நிலையில்நீர்ஆதாரத்துறை சென்னைமண்டல தலைமைப் பொறியாளர் முரளிதரன் வாலாஜாவிலுள்ள பாலாறு அணைக்கட்டில் ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வின்போது அங்கிருந்த அதிகாரிகளிடத்தில்நீர்நிலைகளுக்கு செல்லும் நீர் தடங்கள், ,ஆற்றுக் கால்வாய்கள் குறித்து கேட்டறிந்தார் .

பின்னர் ,அதிகாரிகளுக்கு நீர்நிலைப் பகுதிகளில் 24 மணிநேர கண்காணிப்பு இருக்க வேண்டும். இதுவரை நிரம்பாத உள்ள ஏரிகள் உடனே நிரம்ப தேவையான வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். குறிப்பாக நீர்செல்லும் வழித்தடங்களைக் கண்டு விரைந்து தண்ணீ்ர் செல்ல வழிஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் ஏரிகளில்கசிவு, உடைப்பு எதுவும் ஏற்படாதவாறு தீவிரகண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், அவ்வாறு இருக்கும்பட்சத்தில் விரைந்து சரிசெய்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துகொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டார்.

அப்போது இராணிப்பேட்டை மாவட்ட நீர்ஆதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்