கலெக்டர் தலைமையில் ஊழல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு.
ராணிப்பேட்டையில் கலெக்டர் தலைமையில் ஊழல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் ஊழல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியினை வாசித்தார். அதில், நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் முக்கியத் தடையாக உள்ளது என நம்புகிறேன் . அரசு குடிமக்கள்,மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். என நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும்எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை தடுப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே நான், அனைத்து செயல்களிலும் நேர்மையும் சட்டவிதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல்தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப் படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கூறி உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன்,திட்ட இயக்குநர் ஊரகம் லோகநாயகி ஆகியோர் உடனிருந்து உறுதி மொழியேற்றனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu