புளியங்கன்னு நாகக்கன்னியம்மன் கோயிலில் 5வது வாரத் திருவிழா

புளியங்கன்னு நாகக்கன்னியம்மன் கோயிலில் 5வது வாரத் திருவிழா
X

சிறப்பு அலங்காரத்தில் நாகக்கன்னியம்மன்.

ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கன்னு நாகக்கன்னியம்மன் கோயிலில் 5வது வாரத்திருவிழா விமரிசையாக நடந்தது.

ராணிப்பேட்டையடுத்த நவ்லாக் புளியங்கன்னுவில் உள்ள நாகக்கன்னியம்மன் கோயில் நவகிரகங்களில் ராகு, கேது, பூஜிக்கின்ற விதமாக பிரமாண்ட வடிவில் நாக்கன்னியம்மன் அம்மன் காட்சித்தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். மேலும் கோயிலில் நாக தோஷப்பரிகார பூஜைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆடிமாத 5வது வெள்ளிக்கிழமை திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் காலை அம்மனுக்கு பால்குட அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சிதந்தார்.

பின்னர், நாக தோஷ நிவர்த்தி பூஜைகள் நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து, தோஷ பரிகார யாகங்கள் நடத்தப்பட்டதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. விழாஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் செய்தனர்.

Tags

Next Story