வாக்காளர் பட்டியல் ஆய்வுக்கூட்டம்

வாக்காளர் பட்டியல் ஆய்வுக்கூட்டம்
X

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் மாவட்ட பார்வையாளராக வெ.ஷோபான தலைமை ஏற்றார்.

இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதே போல் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, வாக்களர் பட்டியல் வெளியிடுவதற்கான ஆயத்தப்பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பேபி இந்திரா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களான அனைத்து வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story