ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடுகளை தடுக்க கட்சி ஏஜன்டுக்கு அனுமதி: பாமக மனு
மாதிரி படம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்,ஆற்காடு,திமிரி,வாலாஜாப்பேட்டை,, காவேரிப்பாக்கம், நெமிலி,சோளிங்கர் ஆகிய 7ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சிவார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பெட்டிகள் முறையே ஒன்றியங்களுக்குட்பட்ட கல்லூரி, பள்ளிகளில் வைத்து மூன்றடுக்கு பாதுகாப்பு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் முடிவுக்கான வாக்கு எண்ணிக்கைகள் 12ந்தேதி (நாளை) நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும. ஆட்சியருமான பாஸ்கரப்பாண்டியன் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்குச்சீட்டுகள் பதவிகள் வாரியாக வகைப்படுத்தி பிரிப்பதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தடுப்பு நடவடிக்கையாக தங்கள் கட்சிவேட்பாளரின் ஏஜன்டுகள் உடன் வருவதற்கும், மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ கவரேஜ் எடுக்கோரியும் பாமக மாநில துணை பொதுசெயலாளர் சரவணன் ,கே.எல் இளவழகன் . ஆறுமுக முதலியார்,பூண்டி மோகன், சக்ரவர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu