வாகனங்களில் சென்று கொரோனா தடுப்பூசி: கலெக்டர் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடத்திட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் கிராம ஊராட்சிகளில் 1,2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அதில் தலைமையேற்று பேசிய கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் பேசியதாவது;

இராணிப்பேட்டை மாவட்டத்தில், உள்ள ஒவ்வொரு குறுவட்டங்களில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்கள் ஆகியவற்றிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்ளுடன் நேரடியாக நடமாடும் தடுப்பூசிமுகாம்களை நடத்தி ,அந்தந்த வட்டாட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதில் நடைபாதை வியாபாரிகள், சில்லரைக்கடைவியாபாரிகள், பெரிய வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோர்களில் தடுப்பூசிப் போடாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசிப்போட வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் உடல் நிலைக்குறித்து பரிசோதனை செய்த பிறகே தடுப்பூசி போட வேண்டும். உடல் உபாதைகள், தீராத நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே தடுப்பூசி போடவேண்டும்.

மேலும், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நடமாடும் முகாம் மூலமாக பணியிடங்களுக்குச் சென்று தடுப்பூசி போடவேண்டும். அவற்றை வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாடசியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர், தொழிலாளர்துறை இணை ஆணையாளர் ஆகியோர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என கூறினார்.

கூட்டத்தின் போது,மாவட்ட வருவாய் அலுவலர்,ஜெயச்சந்திரன்,சுகாதாரப்பணிகள் துணைஇயக்குநர் மணிமாறன்,மற்றும் அனைத்து துறைஅதிகாரிகள் உடனிருந்தனர்..

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil