கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
இராணிப்பேட்டை அருகே வானாபாடியில் கோமாரி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர் காந்தி
தேசிய கால்நடை நோய்தடுப்புதிட்டம், கோமாரி நோய்தடுப்பாக 2வது சுற்று தடுப்பூசிப் போடும்பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தைச் சேர்ந்த வானாபாடியில் தடுப்பூசி போடும் முகாம் துவங்கியது. முகாமில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப் பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் காந்தி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
இராணிப்பேட்டை மாவட்ட கால்நடைத்துறை சார்பில் (NADCB,FMDCB) 2வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் 14-12-2021 முதல் 13-1-2022 வரை 31 நாட்களுக்கு அனைத்து ஊராட்சிகளிலும், 26 உதவி கால்நடை மருத்துவர்கள், 12 கால்நடை. ஆய்வாளர்கள் ஈடுபடுகின்றனர்.
முகாமில், சினை, கறவை, கன்றுகள் உட்பட கால்நடைகள் அனைத்திற்கும் தடுப்பூசி போட உள்ளது. மேலும், தடுப்பூசிகள் போடுவற்கு முன்பு கால்நடைகளைக் குறித்து இனம் .கன்றுகள் ஈன்ற விபரம், பால் கறவை அளவு உள்ளிட்டவற்றை இணையத்தில் பதிவுசெய்து அவற்றின் ஆதார் எண்ணாக 12 இலக்கங்களைக் கொண்ட காது வில்லையை பொருத்தப்படுகிறது.
முகாம் துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட்ஊராட்சித் தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றியக்குழுதலைவர் வெங்கடரமணன், மண்டல கால்நடைத்துறை இணை இயக்குநர். நவநீதகிருஷ்ணன், மற்றும் கால்நடை மருத்துவர்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu