ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: தேர்தல் பார்வையாளர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர் சாந்தா கூறினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. தேர்தல் பார்வையாளர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் பேசும்போது, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 4 பதவிகளுக்கு வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்கள், வாக்குச்சீட்டுகளை அச்சடித்த பின்னர் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் சரியாக அச்சிடப்பட்டு உள்ளதா? என்பதை ஒவ்வொரு வாக்குச் சீட்டினையும் சரிபார்த்து வழங்கிட வேண்டும்.

வாக்காளர் பெயர், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் மற்றும் அவர் போட்டியிடும் வார்டு குறித்த தகவல்கள் சுவரொட்டியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து தெளிவாக தெரிந்துகொள்ள உதவும்.

ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு ஒரு சில பகுதிகளில் ஒரே வார்டில் 2 வேட்பாளர்களுக்கும் வாக்கு செலுத்தும் வகையில் ஒரு சில இடங்கள் இருக்கும். அதை முறையாக கண்டறிந்து வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட நிர்வாகத்தை குறை சொல்லாத வகையில் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் தேர்தல் நடைபெற அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்

கூட்டத்தில் எஸ்பி தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அனைத்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!