மரச்செக்கு எண்ணை தயாரிக்க மானியத்துடன் கடன்: கலெக்டர் அறிவிப்பு

மரச்செக்கு எண்ணை தயாரிக்க மானியத்துடன் கடன்: கலெக்டர் அறிவிப்பு
X

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

மரச்செக்கில் எண்ணை தயாரிப்பவர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்நிரமோடி அறிவித்துள்ள ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான அமைப்புசார உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை வளர்ச்சியூட்டும் விதத்தில் கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணைய் உள்ளிட்வைகளை மரச்செக்கில் தயாரிக்கும் தொழிலை அபிவிருத்தி செய்ய 35சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இதனால்,புதியதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு இத்திட்டன் மூலம் பயன் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு இது பொருந்தும். எனவே, இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் வாங்க உள்ள இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டியிடன் கூடிய விலையின் புள்ளி விபரப்பட்டியல்,திட்ட அறிக்கையை தயார்செய்திட வேண்டும்.

அவற்றை, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தில் மனுவுடன் அளிக்க வேண்டும். தொழில் தொடங்க திட்ட அறிக்கைப்படி முதலீடாக110 சதவீதமும், 90 சதவீதம், % வங்கிக்கடனாகவும், அதில் 35 சதவீதம் மானியம் வழங்கி் ஊக்குவிக்கப்படும். எனவே, ஆர்வத்துடன் தொழில் முனைய விரும்புவோர் இத்திட்டத்தினை பயன் படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு வேளாண் துணைஇயக்குநர் மற்றும் அலுவலரை தொடர்புகொள்ளும்படி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்