மழைகாலத்தில் தொற்று நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள கலெக்டர் வேண்டுகோள்
ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து இடங்களில் தொடரந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் மழையால் ஏற்படும் உடல்நலக்கேடு மற்றும் தொற்று நோய்பாதிப்புகளை அறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு காய்ச்சல் மிகவும் அபாயகரமானது. டெங்கு, பகலில் கடிக்கும் கொசுவால் பரவுகிறது. ஆகையால் பகலில் கொசுக் கடிக்காத வாறு பாதுகாத்து கொள்வது அவசியமாகும். கொசுக்கள், பகலில் திறந்த நிலையில் 3நாட்கள் உள்ள எந்த தண்ணீரிலும் இனப்பெருக்கமாகி,மனித உடல் நலத்தில் பெரும்பாதிப்பை உண்டாக்கி விடும்.
எனவே வீட்டில் பயன்படாத பொருட்கள், மாடியில் தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ள பகுதியில் தண்ணீரை அகற்றி சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். மேலும் ஃபிரிட்ஜின் பின்புறம் தண்ணீர்சேராமல் அடிக்கடி சுத்தப்படுத்து வைக்கவேண்டும்.
டெங்குக் காய்ச்சல் அறிகுறிகளை அறிந்து கொண்டும், எந்த காய்ச்சலையும். அலட்சியம் செய்யாமல் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாக்டிரியா தொற்று காரணமாக குடிநீரால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு, டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலை ஆகிய தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே நீரை கொதிக்கும் வரை காய்ச்சி வடிகட்டிய பின்பு சுத்தமான குடிநீரைக் குடித்து நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். .
மேலும் ,ஒவ்வொருவரின் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது, வீட்டையொட்டியுள்ள சுற்றுபுறமும் நோய் பரவ காரணமாக அமையும் என்பதால் சுற்றுபுறங்களில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தல் மலம்கழித்தல் போன்றவைகளை தவிர்க்கவேண்டும் அதேபோல் தண்ணீர.தேங்கும் வகையில் தேவையற்ற பொருட்களை கண்ட இடங்களில் வீசுவதை கைவிடுவதால் கொசுக்கள் பெருகுவதை தடுக்கலாம் .
மேலும் மழையால் பொதுமக்கள் தங்களுக்கு, எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட்டாலும். அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச. சென்று உரியசிகிச்சையை எடுத்துக்கொள்ளவேண்டும் அலட்சியமாக இருப்பது,சுயமருத்துவம் செய்து கொள்வது அதிக பாதிப்புகளை உருவாக்கும்.எனவே உரியசிகிச்சைப் பெற அரசுமருத்துவமனைக்குச் செல்லவேண்டுமெனவும் தேவைப்படும் சூழலில் இரத்தம்,சளி ஆகியனவற்றை பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.
அதேபோல, வெளியூரிலிருந்து உறவினர்கள் உடல்நலக்குறைவுடன் வந்திருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டுமெனவும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu