ஓட்டு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு.

ஓட்டு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு.
X

வாக்குஎண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களில் தயராகிவரும் ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

தமிழகத்தில் இராணிப்பேட்டை உள்ளிட்ட 9மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 6,9 தேதிகளில் 2கட்டங்களாகவும் 12ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அறிவிப்பையொட்டி மாவட்டத்தில் உள்ள 7ஒன்றியங்களில் முதற்கட்டமாக ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் தேர்தல் நடந்து முடிந்தது.

பின்னர், வாக்குப்பெட்டிகள் ஒன்றியங்கள் முறையே ஆற்காடு ஜிவிசிகல்வியியல் கல்லூரி,திமிரி ஆதிபராசக்தி கலைக்கல்லூரி,வாலாஜா இராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்புகளுடன் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

அதனைத்தொடர்ந்து 2ஆம்கட்டமாக அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் சோளிங்கர் ஆகிய 4ஒன்றியங்களில் தேர்தல் நடத்திமுடிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு வாக்கு பெட்டிகள் ஒன்றியங்களில் முறையாக அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, நெமிலி பணப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , காவேரிப்பாக்கம் ஓச்சேரி சப்தகிரி பொறியியல் கல்லூரி, சோளிங்கரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய தேர்தல் அலுவலர்கள் தலைமையில் ,மையங்களில் ஓட்டு எண்ணிக்கை செய்ய தயார் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதில்,வாக்குச்சீட்டுகளை எளிதாக எண்ணும் விதத்தில் அவற்றை சின்னங்கள் வாரியாக பிரித்து வைக்க சிறுபெட்டிகள் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும்,மாவட்டதேர்தல் அலுவலருமான பாஸ்கரப்பாண்டியன் பணிகள் நடந்து வரும் அனைத்து ஒன்றிய வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு செய்து ஆலோசனைகள வழங்கினார் ஆய்வின்போது திட்ட இயக்குநர் முகமை லோகநாயகி, வட்டாட்சியர்கள், மற்றும் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!