12வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலெக்டர் ஆய்வு
பணப்பாக்கம் வேதாத்திரி மகரிஷி தியான மையத்தில் நடந்த தடுப்பூசி முகாகில் ஆய்வு செய்த கலெக்டர்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அதில் வாகனங்களில் பொதுமக்கள் இருப்பிடங்களுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் நடமாடும் தடுப்பூசி திட்டம் மற்றும் வாரந்தோறும் மெகாதடுப்பூசி முகாம் போன்றவற்றை நடத்தி வருகின்றது .
அதன் அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 12வது கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் சென்று ஆய்வு செய்தார். அதில், பணப்பாக்கம் வேதாத்திரி மகரிஷி தியான மையத்தில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு ஆய்வுசெய்தார்..
அதனைதொடர்ந்து நெமிலி தாலூக்கா நெடும்புலி ஊராட்சியில் வீடுவீடாகச் சென்று 18வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் நெடும்புலியில் உள்ள 2780 பேரில் 2740 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளதாகவும் எஞ்சியவர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், வேட்டாங்குளம்,நெமிலி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர், பணப்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேட்டாங்குளம் . உயர்நிலைப்பள்ளி, மற்றும் நெமிலி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடந்த வாக்காளர் சிறப்பு சுருக்க, திருத்த முகாமினைப் பார்வையிட்டு பொதுமக்களிடம் விபரங்கள் கேட்டறிந்தார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu